
Hello Madurai
உங்கள் உள்ளூர் செய்தி மற்றும் தகவல் மையம்
எங்களை பற்றி
அனைவருக்கும் வணக்கம்! 🙏
ஹலோ மதுரை என்பது மதுரையை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு டிஜிட்டல் ஊடக நிறுவனம்.
எங்களது பயணம் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற மாத இதழாக தொடங்கியது. 52 பக்கங்களுடன் மதுரை மாவட்ட மக்களின் வரவேற்பைப் பெற்று, பல்வேறு சமூக, கல்வி, வணிக, கலாச்சார மற்றும் உள்ளூர் செய்திகளை தரமாக வெளியிட்டு வந்தோம்.
2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அச்சு இதழின் வெளியீடு நிறுத்தப்பட்டாலும், எங்களது ஊடகப் பயணம் நிற்கவில்லை.
காலத்தின் மாற்றத்தை உணர்ந்து, 2019 ஆம் ஆண்டு இறுதி முதல் டிஜிட்டல் ஊடகத் துறையில் புதிய பயணத்தைத் தொடங்கினோம். இன்று செய்திகள், நிகழ்வுகள், வீடியோக்கள், உள்ளூர் தகவல்கள் மற்றும் மக்களுக்கு பயனுள்ள சேவைகளை டிஜிட்டல் வடிவில் வேகமாகவும், நம்பகத்தன்மையுடனும் வழங்கி வருகிறோம்.
தற்போது Hello Madurai செயலி Android மற்றும் iOS ஆகிய இரு தளங்களிலும் கிடைக்கிறது. மதுரையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் டிஜிட்டல் வழியாக இணைக்கும் முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
மக்களின் நம்பிக்கையே எங்களின் மிகப்பெரிய பலம். தரமான, பொறுப்பான மற்றும் மக்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்குவதே எங்களின் நோக்கம்.
அன்புடன்,
மு. ரமேஷ் குமார்
நிறுவனர் & ஆசிரியர்
Hello Madurai